சுடச்சுட

  

  ராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

  By DIN  |   Published on : 18th April 2019 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர்- நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. 9ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வரகுணபாண்டீஸ்வரர் சுவாமிக்கும், நித்திய கல்யாணி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. 
  பின்னர் சுவாமியும்- அம்மனும் தனித்தனித் தேர்களில் எழுந்தருளினர்.  தொடர்ந்து, சுவாமிக்கும் அம்மனுக்கும் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் வடம்பிடித்து இழுத்தனர். இரு தேர்களும் ரதவீதியைச் சுற்றி பிற்பகல் 2 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தன. பின்னர் சுவாமி, அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  10ஆம் திருநாளான வியாழக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இரவில் சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருகின்றனர். தெப்ப உற்சவ ஏற்பாடுகளை ராதாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மதன், குடும்பத்தினரும், திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர், ஊர்மக்களும் செய்துவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai