கடையநல்லூர் அரசு நூலகத்தில் ஏப்.20 முதல் இலவச ஓவியப் பயிற்சி
By DIN | Published On : 18th April 2019 01:49 AM | Last Updated : 18th April 2019 01:49 AM | அ+அ அ- |

கடையநல்லூர் அரசு பொது நூலகத்தில் சனிக்கிழமை (ஏப். 20) முதல் நான்கு நாள்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி நடைபெறுகிறது.
அரசு நூலகம் மற்றும் விதைநெல் வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ஏப். 20 முதல் ஏப்.23 ஆம் தேதி வரை நடத்தப்படும் இப்பயிற்சி, மேலக்கடையநல்லூர் நூலகத்தில் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். ஏற்பாடுகளை வாசகர் வட்டத் தலைவர் ஜெயராம், செயலர் நாகராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.