Enable Javscript for better performance
தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 5,692 இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 5,692 இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 21st April 2019 03:19 AM  |   அ+அ அ-   |    |  


    திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 5,692 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
    இதுகுறித்து செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  குழந்தைகளுக்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பரிவு 12(1)(சி) இன் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, அரசால் ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 20132014 ஆம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
    சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் மேலும் சில வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.
    20192020 ஆம் கல்வியாண்டிற்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 434 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக்., மழலையர், தொடக்கப் பள்ளி) நுழைவுநிலை (எல்.கே.ஜி) வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், 5,692 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதற்கு  ட்ற்ற்ல்://ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்.வ்ர்ஸ்.ண்ய்/ற்ஹம்ண்ப்ய்ஹக்ன் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
    முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மாவட்டத்திலுள்ள அரசு இசேவை மையங்களிலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 
    நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
    இணையவழியாக பதிவு செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடத்திற்கான ஆதாரச் சான்று ஆகிய சான்றிதழ்களுடன் குழந்தைகளின் புகைப்படமும் கொண்டுவர வேண்டும். வரும் 22 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp