கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை
By DIN | Published On : 21st April 2019 01:20 AM | Last Updated : 21st April 2019 01:20 AM | அ+அ அ- |

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாலை 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வந்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், ஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.