சிந்தாமணியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
By DIN | Published On : 21st April 2019 01:21 AM | Last Updated : 21st April 2019 01:21 AM | அ+அ அ- |

புளியங்குடி-சிந்தாமணியில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
புளியங்குடி வாலன் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் பிரவீன்குமார்(23). இவர் வெள்ளிக்கிழமை சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டு விட்டு,மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி விட்டு எதிர் புறம் சென்றாராம். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.