உலக புவி நாள்: அறிவியல் மையத்தில் இன்று இலை ஓவியப் போட்டி
By DIN | Published On : 22nd April 2019 09:54 AM | Last Updated : 22nd April 2019 09:54 AM | அ+அ அ- |

உலக புவி நாளை முன்னிட்டு, மாணவர்கள் மாணவிகளுக்கான இலை ஓவியப் போட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.
உலகெங்கும் ஆண்டுதோறும் ஏப். 22 தேதி புவி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. பூமித் தாய் நாம் உயிர் வாழ அளிக்கும் கொடையை நினைவுகூர்ந்து போற்றும் விதமாகவும், பூமித் தாயை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாகவும் 1970ஆம் ஆண்டு முதல் உலக புவி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு வனத்துறை, திருநெல்வேலி கோட்டம், மாவட்ட அறிவியல் மையம், அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம் ஆகியவை இணைந்து மாணவர்-மாணவிகளுக்கான இலை ஓவியப் போட்டியை மாவட்ட அறிவியல் மையத்தில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் 11 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள், மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் பகுதியிலுள்ள மரம், செடி மற்றும் கொடிகளில் இருந்து இலைகளை சேகரித்து வந்து அவற்றைப் பயன்படுத்தி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விலங்கினங்களை தங்களுக்கு வழங்கப்படும் அட்டையில் உருவாக்க வேண்டும். மாணவர்கள், இலைகள் மற்றும் அவற்றை ஒட்டுவதற்குத் தேவையான பசை (எமங ஆஞபபகஉ) கொண்டுவரப்பட வேண்டும். வரைபட அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாணவர்கள் குறித்த நேரத்துக்குள் மாவட்ட அறிவியல் மையத்திற்கு வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.