நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் ஆலங்குளம் வியாபாரிகள் மனு
By DIN | Published On : 23rd April 2019 09:55 AM | Last Updated : 23rd April 2019 09:55 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஆலங்குளம் வியாபாரிகள் சார்பில் திங்கள்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா தலைமையில் வியாபாரிகள் அளித்த மனு:
ஆலங்குளத்தில் மில் தொழிலாளர்களுக்காக இரவு நேரங்களில் ஒரு சில கடைகள் திறந்து வைத்திருப்பது வழக்கம். ஆனால், ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு ஆபாசமாக பேசுவதோடு, பொருள்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல் கண்காணிப்பாளரும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மே 1 ஆம் தேதி மாலை 6 மணி முதல் கடையடைப்பு நடத்தப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.