முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தென்காசி பள்ளியில் மழைநீர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 04th August 2019 01:31 AM | Last Updated : 04th August 2019 01:31 AM | அ+அ அ- |

தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசி எக்ஸ்னோரா சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ராதா(பொ) தலைமை வகித்தார். எக்ஸ்னோரா மாவட்டச் செயலர் சங்கரநாராயணன், தென்காசி நகரச் செயலர் துரை மீனாட்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி மழை நீர் சேகரிப்பு குறித்தும், மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும் பேசினார். தொடர்ந்து அவர் மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். தென்காசி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சிவா, கணேஷ் ஆகியோர் நீர் பாதுகாப்பு குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிர்வாகிகள் ராசிசுரேஷ், வேலு, பசுமைப்படை பொறுப்பாளர் சங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியை அமலாஜான் தொகுத்து வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியை தமிழ்வாணி வரவேற்றார்.சிபிசக்கரவர்த்தி நன்றி கூறினார்.