முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தெற்குகள்ளிகுளத்தில் மாரத்தான் போட்டி
By DIN | Published On : 04th August 2019 01:34 AM | Last Updated : 04th August 2019 01:34 AM | அ+அ அ- |

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா திருவிழாவின் 8ஆம் நாளையொட்டி பம்பாய் களிகை சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டி தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயம் முன்பிருந்து தொடங்கி 5 கி.மீ. தொலைவில் உள்ள செளந்திரபாண்டியபுரம் வரை நடைபெற்றது. போட்டியை தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தொடங்கிவைத்தார். பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஆசீர்வதித்தார்.
போட்டியில், செளந்திரபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஹரி முதலிடம் பெற்றார். அவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. 2ஆவது இடம் பெற்ற லயோலா கல்லூரி மாணவர் தெற்குகள்ளிகுளத்தைச் சேர்ந்த ஜாய்பிரகாஷ்கு ரூ.5ஆயிரமும், 3ஆவது இடத்தை ஜெகின்ஜோ மற்றும் வினோத் ராஜா ஆகிய இருவர் பெற்றனர். இருவருக்கும் தலா ரூ.1,500 வழங்கப்பட்டது.
போட்டிகளை பம்பாய் களிகை சங்கத் தலைவர் ஜே.ஐ.சந்திரன், செயலர் ஏ.மைக்கிள் பிரகாசம், பொருளாளர் ஜி.அந்தோணி ஜோ ராஜா, துணைத் தலைவர் இ.ஆல்வின், இணைச் செயலர்கள் எம்.ஜெரோம் சுரேஷ், சீலன், துணைப் பொருளாளர் ஆர்.ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.