முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தேசிய கல்விக் கொள்கை: பாளை.யில் கருத்தரங்கு
By DIN | Published On : 04th August 2019 04:02 AM | Last Updated : 04th August 2019 04:02 AM | அ+அ அ- |

வித்யா பாரதி சார்பில் தேசிய கல்விக் கொள்கை 2019 தொடர்பாக தமிழகத்தின் பார்வை குறித்த கருத்தரங்கு பாளையங்கோட்டை அரசு அலுவலர் பி குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி தலைமை வகித்தார். சாரதா பெண்கள் கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா வாழ்த்திப் பேசினார்.
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முதல்வர் எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ராஜரத்தினம் ஆகியோர் தேசியக் கல்விக் கொள்கை குறித்து தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில், தேசியக் கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் ரா.வன்னியராஜன் நிறைவுரையாற்றினார். இக் கருத்தரங்கில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை வித்யா பாரதி அமைப்பின் தென் தமிழ்நாடு தலைவர் ச.குமாரசுவாமி செய்திருந்தார்.