முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாபநாசம் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 04th August 2019 01:31 AM | Last Updated : 04th August 2019 01:31 AM | அ+அ அ- |

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நூலகத் துறை, தகவல் அறிவியல் துறை, நிகில் பவுண்டேஷன் இணைந்து மாணவர்களுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சியை சனிக்கிழமை நடத்தின.
கல்லூரி முதல்வர் சு. சுந்தரம் தலைமை வகித்தார். கவிஞர் என். சுப்பையா இறைவணக்கம் பாடினார்.
அம்பாசமுத்திரம் விகாசா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜவஹர் ஜேசுதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மலர்க்கொடி, நாகலிங்கம், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ரா. நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகில் பவுண்டேஷன் சார்பில் உன்னையே நீ அறிவாய், இலக்கு அமைத்தல், திறன்மிகு தொடர்பாற்றல், மனித நேயம், நினைவாற்றல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியாளர்கள் பயிற்சியளித்தனர்.
துறைத் தலைவர்கள் சு. சிவசங்கர், கை. அண்ணாத்துரை, ல. ரவிசங்கர், பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், அ. பாக்கியமுத்து, உடற்பயிற்சி இயக்குநர் பழனிகுமார், பேராசிரியர்கள், 500-க்கும் மேற்பட்ட மாணவர்- மாணவிகள் பங்கேற்றனர். வேதியியல் துறைத் தலைவர் ராஜசேகரன் வரவேற்றார்.
3ஆம் ஆண்டு வணிகவியல் மாணவி சரண்யா நன்றி கூறினார்.
செந்தமிழ்ப் பேரவை தொடக்கம்: பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் ரா.பி.சேதுப்பிள்ளை செந்தமிழ்ப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சு.சுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி நிர்வாக அதிகாரி ரா.நடராஜன் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் ஆறு.அழகப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரவையைத் தொடங்கிவைத்து திருக்குறள் காட்டும் ஒழுக்கமும் ஊதியமும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கோ.விஜயா வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா.இந்துபாலா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.