முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை.யில் ஆக.9இல் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்
By DIN | Published On : 04th August 2019 04:01 AM | Last Updated : 04th August 2019 04:01 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகின்றன.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கத் தலைவர் அய்யாதுரை பாண்டியன், செயலர் வீ.பி.பாரதி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
14, 16, 18, 20 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., 5,000 மீ. ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலிக் குண்டு எறிதல், கம்பு
ஊன்றித் தாண்டுதல், 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4ஷ்100 மீ. தொடர் ஓட்டம், 4ஷ்400 மீ. தொடர் ஓட்டம் ஆகியவை ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படும்.
இப்போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பங்கேற்கும் போட்டி ஆகியவற்றின் விவரங்களை
உரிய படிவத்தில் நிரப்பி வரும் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்னதாக ஸ்ல்க்ஷட்ஹழ்ஹற்ட்ண்ள்ங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ஹ்.ற்க்ஹஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது திருநெல்வேலி மாவட்ட தடகள
சங்கம், தரைதளம், லைப் ஸ்டைல் அபார்ட்மென்ட், ராமலிங்கா நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627007 என்ற முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.
நுழைவுக் கட்டணம் ரூ.50. இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் வரும் 30-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9486866709, 8300021575, 9629780835 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.