முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பேராத்து செல்வி அம்மன் கோயிலில்ஆடித்திருவிழா இன்று தொடக்கம்
By DIN | Published On : 04th August 2019 04:03 AM | Last Updated : 04th August 2019 04:03 AM | அ+அ அ- |

வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத முளைக் கட்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இத்திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) முதல் 7 ஆம் தேதி வரை ஆடித்திருவிழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. 6ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், இரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனையும் நடைபெறவுள்ளது. 7ஆம்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் முளைப்பாரி திருவீதிஉலா நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை செயல் அலுவர் மற்றும் கட்டளைதாரர் ஜி.ராஜாமணி, ஆறுமுகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.