முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் திருமதி உணவுந்து சேவை
By DIN | Published On : 04th August 2019 04:03 AM | Last Updated : 04th August 2019 04:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் மானூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளங்குளம் செல்லிஅம்மன் மகளிர் சுயஉதவிக் குழு சார்பில் திருமதி உணவுந்து சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த வாகனத்தின் சாவியை மகளிர் குழுவிடம் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வழங்கி, சேவையைத் தொடக்கிவைத்தார்.
இதுகுறித்து இந்த வாகனத்தில் பணியாற்றும் பெண் கூறியது: இந்த வாகனம் திங்கள்கிழமைதோறும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி காலை, மதிய உணவுகளை குறைந்த விலையில் விற்பனை செய்வோம். மாலை நேரங்களில் திருநெல்வேலி நகரத்தில் விற்பனை செய்வோம். செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி அருகே காலை, மதிய வேளைகளில் விற்பனை செய்வோம். மேலும் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனம் மூலம் சிற்றுண்டி விற்பனை செய்வோம் என்றார்.