ஆடிப்பூரம்: அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம்

ஆடிப் பூரத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஆடிப் பூரத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
 ஆழ்வார்குறிச்சி அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் அம்பாளுக்கு வளைகாப்பு  அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பக்த சபாவினர் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர்.  
திருப்புடைமருதூர் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கன்னிபூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுமங்கலி பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் சனிக்கிழமை  மாலை பக்தர்கள் கொண்டு வந்த வளையல்களை வைத்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி,  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை: செங்கோட்டை தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் கோயிலிருந்து சீர்வரிசை கொண்டு வருதல், பின்னர்  7.30 மணிக்கு அம்மனுக்கு வளைகாப்பு உத்ஸவம் நடைபெற்றது.
கடையநல்லூர்: புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் குருநாதர் சக்தியம்மாவின் சொற்பொழிவு நடைபெற்றது . மாலையில்,  பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் என முப்பெரும் தேவியருக்கு 21வகையான அபிஷேகங்களும், தொடர்ந்து சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரத்துடன், வளைகாப்பு வைபவமும், தொடர்ந்து பெரிய தீபாராதனையும் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
அனைத்து கோயில்களிலும் புதிய தாலிக் கயிறு, வளையல், சந்தனம், குங்குமம், லட்டு, முருக்கு உள்ளிட்ய  பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com