சீசன் நிறைவு: மாங்காய் விலை உயர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மாங்காய் சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாங்காய் விலை கிலோ

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மாங்காய் சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாங்காய் விலை கிலோ ரூ.66 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல அவரைக்காய், இஞ்சி விலையும் உச்சத்தில் உள்ளது.
திருநெல்வேலி காய்கனி சந்தைகளுக்கு தென்காசி, புளியரை, களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கோடை மாங்காய் விற்பனைக்காக வருகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் தொடங்கும் கோடை மாங்காய் சீசன் ஜூலை இறுதியில் நிறைவடையும். கடந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழை ஓரளவு பெய்ததால் நிகழாண்டில் மாங்காய் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. ஆலங்குளம், களக்காடு பகுதிகளில் திடீரென வீசிய காற்றால் மாங்காய்கள் சேதமான நிலையில் விலை மிகவும் வீழ்ச்சியடைந்தது. கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை கிளிமூக்கு ரகங்கள் விற்பனைக்கு வந்தன. இப்போது கோடை மாங்காய் சீசன் முடிந்துள்ளதால் மீண்டும் விலை அதிகரித்து கிலோ ரூ.66 -க்கு விற்பனையானது. கொடிகளில் வளரும் காய்களான புடலங்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை விவரம் (கிலோவுக்கு): கத்தரிக்காய்-ரூ.16, வெண்டைக்காய்-ரூ.25, தக்காளி-ரூ.22, அவரை-ரூ.40, கொத்தவரை-ரூ.20, புடலங்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.40, சுரைக்காய்-ரூ.10, பாகற்காய்-ரூ.45, மாங்காய்- ரூ.66, முருங்கைக்காய்- ரூ.38, பச்சைமிளகாய்- ரூ.24, வாழைக்காய்- ரூ.35, தடியங்காய்-ரூ.14, பூசணிக்காய்-ரூ.16, தேங்காய்-ரூ.30, வெள்ளரிக்காய்-ரூ.30, முள்ளங்கி-ரூ.20, பல்லாரி- ரூ.25, சின்னவெங்காயம்-ரூ.44, சேனைக்கிழங்கு-ரூ.36, எலுமிச்சை-ரூ.75, தண்டுகீரை- ரூ.10, அரைக்கீரை-ரூ.10, குத்துப்பசலைகீரை-ரூ.10, மணத்தக்காளிகீரை- ரூ.20, கொத்தமல்லி கீரை-ரூ.120, உருளைக்கிழங்கு-ரூ.20, கேரட்-ரூ.56, பீட்ரூட்-ரூ.34,  செளசெள-ரூ.38, ரிங் பீன்ஸ்-ரூ.68, இஞ்சி-ரூ.190, நெல்லிக்காய்-ரூ.50, வாழைப்பழம்- ரூ.70, நூல்கோல்-ரூ.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com