நோவா கால்பந்து: அரையிறுதியில் பாளை., டோனாவூர் அணிகள்

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மாவட்ட அளவிலான நோவா

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மாவட்ட அளவிலான நோவா கால்பந்து போட்டியில் பாளையிலிருந்து 3 அணிகளும், டோனாவூர் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
திருநெல்வேலி மாவட்ட கால்பந்து கழகம், நோவா கார்பன் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில்  நோவா கால்பந்து போட்டி,  பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.   ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  காலிறுதிப் போட்டியில் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை 1-0 என்ற கோல் கணக்கிலும்,  பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி ஏ அணி, கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளியை 3-1 என்ற கோல் கணக்கிலும் வென்றன. 
மேலும், பாளை. எம்என்ஏ ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி ஏ அணி, தூய யோவான் மேல்நிலைப்பள்ளி அணியை 5-0 என்ற கோல் கணக்கிலும், டோனாவூர், சந்தோஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, குற்றாலம் செய்யது மேல்நிலைப்பள்ளியை 6-0 என்ற கோல் கணக்கிலும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. திங்கள்கிழமை(ஆக.5)  காலை அரையிறுதிப்போட்டிகளும், மாலை இறுதிப்போட்டியும் நடைபெறும்.  போட்டியை, கால்பந்து கழகத் தலைவர் செல்வின், செயலர் ராஜசேகரன், பொருளாளர் பால் ரொட்ரிகோ, நோவா கார்பன் நிர்வாக இயக்குநர் அந்தோணி தாமஸ், மேலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com