எஸ்டிபிஐ போராட்டம்: 145 பேர் கைது

பாளையங்கோட்டையில் வங்கியை முற்றுகையிட முயன்றதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 145 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டையில் வங்கியை முற்றுகையிட முயன்றதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 145 பேர் கைது செய்யப்பட்டனர்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்.  காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். என்.ஐ.ஏ. சட்டத்தில் மாநில சுயாட்சியை பறிக்கும் விதமாக திருத்தங்களை செய்த மத்திய அரசைக் கண்டித்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி பாளையங்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கனி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் கோட்டூர் எம்.கே.பீர்,  மாவட்ட துணைத் தலைவர் ஷாஹுல் ஹமீத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பேட்டை முஸ்தபா, அலாவுதீன், மீராஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
முழக்கங்களுடன் வங்கியை முற்றுகையிட முயன்ற போராட்டக்குழுவினரை அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப் போராட்டத்தில் பங்கேற்ற 36 பெண்கள் உள்பட 145 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com