நெல்லை அருங்காட்சியகத்தில் பேச்சுப் போட்டி

சுதந்திர தினத்தை முன்னிட்டு,  பள்ளி மாணவர்- மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி திருநெல்வேலி அரசு

சுதந்திர தினத்தை முன்னிட்டு,  பள்ளி மாணவர்- மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்- மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளாக பேச்சுப் போட்டி நடைபெற்றது.  "எனக்குப் பிடித்த விடுதலைப் போராட்ட வீரர்' என்ற தலைப்பில்  6, 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்-மாணவிகளுக்கும்,  "இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு' என்னும் தலைப்பில் 8 ,9ஆம் வகுப்பு மாணவர்- மாணவிகளுக்கும், "இந்திய சுதந்திர போராட்டத்தில் நெல்லையின் பங்கு' என்கிற தலைப்பில் 10 - 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்-மாணவிகளுக்கும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இப் போட்டிகளில், நா. உஷாதேவி, வெ ராமசாமி, அமலி, லக்ஷ்மி சங்கர், ஜிஸா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.  இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்- மாணவிகள் கலந்துகொண்டனர். 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் ,சுதந்திர தினத்தன்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு விழாவில் வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com