வரலட்சுமி நோன்பு: தாமிரவருணியில் வழிபாடு

வரலெட்சுமி நோன்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி,  திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வரலெட்சுமி நோன்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி,  திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றின் மையப்பகுதியில் பாறையில் பாலாதிரிபுரசுந்தரி அம்பாளுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகத்தை புவனேஸ்வரி பீடம் பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் நடத்தினார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பாலா ஆவஹணம், பாலா சகஸ்ரநாமம், ஸ்ரீவித்யா ஜெபம் உள்ளிட்டவை நடைபெற்றன.
மழை வேண்டி தாமிரவருணி நதிக்கு சிறப்பு பூஜையும்,  வருண ஜெபம் பாராயணமும் நடைபெற்றது.  பண்டிட் மணி ஐயர், பெங்களூரு பிரசாத், தலைமை சீடர் ஸ்ரீகாந்த், வேதபண்டிதர் ராமகிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com