சுடச்சுட

  

  திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் பவித்ரோத்ஸவ திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  கோயில் பூஜைகளில் அறியாமல் நிகழும் குறைபாடுகளுக்கு பரிகாரமாக ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பெருஞ்சாந்தி விழாவான இவ்விழாவையொட்டி, அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும்,  ஸ்ரீ சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும் நான்கு ரதவீதிகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
  ஏற்பாடுகளை செயல் அலுவலர் ந.யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai