சுடச்சுட

  

  சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சியில் 2 வைக்கோல் படப்புகள் எரிந்து சேதமாகின. 
  குப்பக்குறிச்சி பிரதான தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் சங்கர பாண்டியன். இவருக்குச் சொந்தமான வைக்கோல் படப்பில் திங்கள்கிழமை தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கரபாண்டியன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகே இருந்த மற்றொரு வைக்கோல் படப்புக்கும் தீ பரவியது. தகவலறிந்து வந்த பாளை. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் படப்புகளில் பெருமளவு பகுதி எரிந்து சேதமானது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai