சுடச்சுட

  

  அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித் தவசு தெப்ப உற்சவம்

  By DIN  |   Published on : 15th August 2019 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத  அருள்மிகு சங்கரலிங்க சுவாமி திருக் கோயிலில் ஆடித்தவசு    தெப்ப உற்சவம் புதன்கிழமை நடை பெற்றது. 
   இக்கோயிலில் ஆக. 3 ஆம் தேதி ஆடித் தவசு திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து, ஆக. 12இல் காலை 9 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7.30 மணிக்கு இடப வாகனத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன. ஆக. 13இல் காலை 4.30 மணிக்கு அபிஷேகம், தீபாரா தனையை தொடர்ந்து வெள்ளிச் சப்பரத்தில் அம்பாள் தவசுக்கு எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு சங்கரநாராயணர் தவசுக் காட்சியும்,  சங்கரலிங்க சுவாமி அம்பாளுக்கு இடப வாகனத்தில் காட்சி  தரிசனமும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.
   புதன்கிழமை சங்கரலிங்க சுவாமி கோமதியம்பாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. மாலையில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுவாமி- அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளினர். பின்னர், வேதபாராயணங்கள் முழங்க தெப்பத்தில் 11 சுற்று வலம் வந்தனர். விழாவில்  திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  வியாழக்கிழமை (ஆக. 15)  இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், சுவாமி-அம்பாள் வீதிவுலாவும் நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai