சுடச்சுட

  

  வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலின் ஆடி மாத பிரமோற்சவ விழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து, தினமும் இரவில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், கருடாழ்வார் வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், தோளுக்கினியான் வாகனம்  ஆகியவற்றில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை காலை  தேரோட்டம் நடைபெற்றது. இதில்  திரளான மக்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை வடக்கு விசயநாராயணம் தர்மசாலா சார்பில் விஜயநாராயணசுவாமி செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai