சுடச்சுட

  

  பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் 540 பயனாளிகளுக்கு கோழிகளை செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ, வழங்கினார்.
  தமிழக அரசின் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள் வழங்கும் விழா பாவூர்சத்திரம் கால்நடை மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஆறுமுகப்பெருமாள் தலைமை வகித்தார்.
  சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் பங்கேற்று, 540 பயனாளிகளுக்கு கோழிகள், அவற்றிற்கான தீவனம், கூண்டு அமைக்கும் செலவு உள்ளிட்ட ரூ.30 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை  வழங்கினார். 
  இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் முருகையா, கால்நடை மருத்துவர்கள் மகேஸ்வரி, செல்வ குத்தாலிங்கம்,  மாறன்வழுதி, பாலமுருகன், கிருஷ்ணமணி, அசன் காசிம், ரமாதேவி, அதிமுக ஒன்றியச் செயலர் அமல்ராஜ், நிர்வாகிகள் ரமேஷ், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai