சுடச்சுட

  

  பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி, கஸ்பாதெரு, இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பிராமணவிளை சக்தி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
  திங்கள்கிழமை  மாலை திருவிளக்கு பூஜையும், செவ்வாய்க்கிழமை மாலை குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பெற்று, அம்மனுக்கு விசேஷ பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானமும், நள்ளிரவு ஜாம பூஜையும், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வருதலும் நடைபெற்றன. புதன்கிழமை காலை பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்து வருதல், உச்சி கால பூஜையுடன் கொடைவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கஸ்பா தெரு இளைஞரணியினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai