சுடச்சுட

    

    மாணவர்களின் தனித் திறன்களை வெளிக்கொணர நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பூபதி

    By DIN  |   Published on : 15th August 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களின் கல்வி, தனித் திறன்களை வெளிக்கொணர முயற்சிகள் எடுக்கப்படும் என்றார், புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பூபதி.
    திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த கணேசன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, சென்னையில் பணியாற்றி வந்த ஆர். பூபதி, இம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். புதன்கிழமை காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர்,  செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாரம்பரியம் மிகுந்த இம்மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிக் கல்வியில் தனியொரு இடம் பெற்ற இம்மாவட்டம் பொதுத்தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியைப் பெற்று வருகிறது. அதேநிலை தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
    மாணவர்களின் கல்வி, ஆளுமைத் திறன், தனித் திறமைகளை வெளிக்கொணர ஆசிரியர்களுடன் இணைந்து தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். மாணவர்களிடம் நல்ல பண்புகளை வளர்ப்பதோடு, அவர்களை சிறந்த குடிமகனாக மாற்றுவதே கல்வியின் நோக்கம். அதைச் செயல்படுத்த அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்படுவர். பெற்றோரும் தகுந்த ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai