சுடச்சுட

  

  ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ: மாநகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 15th August 2019 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீவிபத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறியும்,  குப்பைகள் கொட்டுவதை நிறுத்தக் கோரியும் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் மா. மாரியப்ப பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சந்திரன், பொருளாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலர் செல்லையா, நிர்வாகிகள் மாசிலாமணி, பாலமுருகன், பேச்சிப்பாண்டியன், இளைஞரணிச் செயலர் ராஜா, பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

  "தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது'
  இதனிடையே,  மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெப்பச்சலனத்தால் ஏற்பட்ட உராய்வின் காரணமாகவும், கடந்த 10ஆம் தேதி வேகமாக வீசிய காற்றினாலும் ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ பரவியது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர்  தீயை கட்டுக்குள் கொண்டு வருவது சவாலானதாக இருந்தது.  மாநகராட்சியின் சார்பில் 20 டிப்பர் லாரிகள் மூலம்  மண் கொட்டப்பட்டு, 10  பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் புகை மண்டலம் ஏற்பட்ட பகுதிகளில் நிரப்பி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இப்பணியினை தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக ஷிப்ட் முறையில் 60 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அங்குள்ள நிலவரத்தை செயற்பொறியாளர்கள்,  உதவி செயற்பொறியாளர்கள்,  மாநகர நல அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து தினந்தோறும் அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai