சுடச்சுட

  

  வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

  By DIN  |   Published on : 15th August 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாசுதேவநல்லூர் அருகே கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
  வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரம் என்ற தேசியம்பட்டியில் உள்ள மடத்துத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி (45). தொழிலாளியான இவருக்கு, மனைவி காளியம்மாள்(42), மகள் கனகா (25), மகன் காளிராஜ் (22)ஆகியோர் உள்ளனர். செவ்வாய்க்கிழமை (ஆக. 13) வேலைக்குச் சென்ற கருப்பசாமி வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், ஊருக்கு மேற்கேயுள்ள உத்தண்டன் என்பவரது கிணற்றில் அவர் இறந்துகிடப்பதாக புதன்கிழமை கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, வாசுதேவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai