Enable Javscript for better performance
நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியா? என்.ஆர்.தனபாலன் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியா? என்.ஆர்.தனபாலன் பேட்டி

    By DIN  |   Published on : 24th August 2019 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நான்குனேரி இடைத்தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிட அ.தி.மு.க. கூட்டணி வாய்ப்பளித்தால் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன்.
    கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வள்ளியூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  
    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது நாட்டிற்கே தலைகுனிவானது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும்  கொலைச் சம்பவங்களில் வேலையில்லாத இளைஞர்கள் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளனர்.  வேலைவாய்ப்பின்மையால்தான் இதுபோன்ற சட்ட- ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, மத்திய- மாநில அரசுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். 
    நான்குனேரி இடைத்தேர்தலிலும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும். நான்குனேரி தொகுதியில் எங்கள் கட்சி போட்டியிட அதிமுக கூட்டணி வாய்ப்பளித்தால் நிச்சயமாக  வெற்றி பெறுவோம் என்றார். 
    பேட்டியின்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கேசவனேரி தி.முருகன், பொருளாளர் சசிகுமார்  உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai