Enable Javscript for better performance
பணகுடி துணை சுகாதார நிலைய கட்டடப் பணிக்கு நிலம் அளவீடு- Dinamani

சுடச்சுட

    

    பணகுடி துணை சுகாதார நிலைய கட்டடப் பணிக்கு நிலம் அளவீடு

    By DIN  |   Published on : 24th August 2019 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணகுடி, தளவாய்புரத்தில் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிக்கான நிலம் அளவிடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    தளவாய்புரத்தில் 1987இல் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த துணை சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்து இடிந்துவிழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அரசு துணை சுகாதார நிலையம் பணகுடி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்தது.
    இதனால், தளவாய்புரம், சொக்கலிங்கபுரம், ரோஸ்மியாபுரம், வீரபாண்டியன், குமந்தான்புரம், சமாதானபுரம் ஆகிய  பகுதிகளைச் சேர்ந்த மக்களும், செங்கல் சூளை தொழிலாளர்களும் மருத்துவ சிகிச்சை பெற சிரமப்பட்டு வந்தனர்.
    இதைத் தொடர்ந்து, தளவாய்புரத்தில்  ரூ.25 லட்சம் செலவில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கிய நிலையில், அந்த இடம் தொடர்பாக சிலர் ஆட்சேபம்  தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பணி நிறுத்தப்பட்டது. 
    இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பிறப்பித்த  உத்தரவின்பேரில், ராதாபுரம் வட்டாட்சியர் செல்வன், நான்குனேரி தனி வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், நில அளவையர் மாரியப்பன், கிராம  நிர்வாக அலுவலர்கள் மாரியம்மாள், விஜய் ஆகியோர் தளவாய்புரம் துணை சுகாதார நிலையத்திற்குச் சொந்தமான நிலத்தையும், அப்பகுதியில் ஆக்கிரமிப்புக்குள்ளான இடத்தையும் அளவீடு செய்தனர். 
    பின்னர், இந்த அளவு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி தொடரும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai