Enable Javscript for better performance
பாளை.யில்  விவேகானந்தர் மன்றக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவேகனந்தர் மன்றத்தின் 250ஆவது கூட்டம் பாளையங்கோட்டை மாநில தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. 
    கூட்டத்திற்கு மன்ற நிறுவனர் வளன் அரசு தலைமை வகித்தார். முருகேசன் இறைவணக்கம் பாடினார். மன்றச் செயலர் சுந்தரம் வரவேற்றார். "சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் சுவாமி விவேகானந்தரின் தாக்கம்' என்ற தலைப்பில் கணபதி சுப்பிரமணியம் பேசினார்.
    தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், வரலாற்று ஆய்வாளர் செ. திவான், ராசகிளி, ஐயப்பன், உஷாதேவி, சொ. முத்துசாமி, பாமா, சுப்பிரமணியம், கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
    அண்மையில் முனைவர் பட்டம் பெற்ற கணபதி சுப்பிரமணியம் பாராட்டப்பட்டார். கூட்டத்தில் ஸ்ரீதேவி, சுப்ரமணியம், எஸ். முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முருகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai