Enable Javscript for better performance
பாளை. கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்4 இலவச மாதிரித் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பாளை. கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப்4 இலவச மாதிரித் தேர்வு

    By DIN  |   Published on : 24th August 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறுகிறது. 
    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலக ஆணைக்குழு, திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகத்துறை, சென்னை ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி  ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் இந்த மாதிரி தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கும். 
    தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் 9626272890 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai