2ஆம் நிலை காவலர்கள் பணி: 17 மையங்களில் நாளை எழுத்துத் தேர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்களில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு  ஞாயிற்றுக்கிழமை 

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்களில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு  ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறுகிறது.  இந்தத் தேர்வை 21,896 பேர் எழுதுகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்களில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.  இத்தேர்வை 21,896  பேர் எழுதுகிறார்கள். இதற்கான  தேர்வு மையங்களின் விவரம் (விண்ணப்பதாரர்களின் எண் அடைப்புக்குறிக்குள்):
ஆண் விண்ணப்பதாரர்கள்:  திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பிராந்திய வளாகத்தில் 800 பேரும் (3000001 - 3000800), வி.கே.புரம் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000 பேரும் (3000801 -  3001800),  வண்ணார்பேட்டை  பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 1500 பேரும் (3001801 -  3003300), திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 1000 பேரும் (3003301 -  3004300), பிரான்சேரி பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் 4000 பேரும் (3004301 -  3008300),  பாளை. தியாகராஜநகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 1000 பேரும் (3008301 - 3009300) தேர்வு எழுதுகிறார்கள்.
  பாளை. ரோஸ்மேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1200 பேரும் (3009301 -  3010500),  வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி பள்ளியில்1200 பேரும் (3010501 -  3011700) , புளியங்குடி எஸ்.வி.நகர் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில்  2000 பேரும் (3011701 -  3013700),  பாளை. பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரியில் 2000 பேரும் (3013701 -  3015700), சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் 1000 பேரும் (3015701 - 3016700), தாழையூத்து  சங்கர்நகர் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1000 பேரும் (3016701 - 3017700), பாளை.தூய யோவான்  மேல்நிலைப்பள்ளியில் 772 பேரும் (3017701 -  3018472) தேர்வெழுதுகிறார்கள்.
பெண் விண்ணப்பதாரர்கள்: சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலைக் கல்லூரியில் 500 பேரும் (8000001 -  8000500), சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் 1000 பேரும் (8000501 - 8001500), பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் 1000 பேரும் (8001501 - 8002500), ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் 924 பேரும் (8002501 - 8003424)தேர்வு எழுதுகிறார்கள்.  இவர்களுக்கான அழைப்புக் கடிதம் ,  அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை,  தேர்வு எழுதும் அட்டை,   ஊதா அல்லது கருமை நிற பந்து முனை பேனா ஆகியவற்றை  மட்டுமே தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்லக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com