இலந்தைகுளத்தில் குடிமராமத்துப் பணி தொடக்கம்

பாளையங்கோட்டை வட்டம், இலந்தைகுளத்தில்  குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். 

பாளையங்கோட்டை வட்டம், இலந்தைகுளத்தில்  குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். 
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இலந்தைகுளத்தில் பணிகளைத் தொடங்கிவைத்தப்பின் ஆட்சியர் கூறியதாவது:
 திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் ரூ.3.24 கோடியில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறுகின்றன.  பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் அல்லது நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள்அல்லது  பாசனதாரர்கள்  மூலமாக இப்பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகளை வகுத்துள்ளது. அதனால், இத்திட்டமானது அந்தப்பகுதி விவசாயிகள் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது. இப்பணிகளை கண்காணிக்க மாநகராட்சி பொறியாளர்களைக் கொண்ட 10 துணை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் கால்வாயின் கடை மடை பகுதி வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும்.  பாளையங்கால்வாயின் மூலம் 57 குளங்கள் நிரம்பி,  9500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திருநெல்வேலி கால்வாயின் மூலமாக  23 குளங்கள் நிரம்பி,  6,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், கால்வாய் சுத்தப்படுத்துவதால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். நகர- ஊரகப் பகுதிகளில் 200 நீர்நிலைகள் இனம் காணப்பட்டு கொடையாளர்கள் மூலம் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.  
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com