இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி: இன்று சிறப்பு தரிசனம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தக் கோயிலில் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி விழாவில், ஸ்ரீ கிருஷ்ணர்- மஞ்சள் நிற பட்டு உடுத்தியும், ஸ்ரீபலராமர் நீல நிற பட்டு உடுத்தியும் வண்ண மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நரசிம்ம பிரார்த்தனையும், துளசி பூஜையும் நடைபெற்றது.
ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், பிரம்ம சம்ஹிதையிலிருந்து பாராயணம் ஆகியவை நடைபெற்றன. கோயிலில் அமைக்கப்பட்டிருந்த புத்தக நிலையத்தில் ஸ்ரீகிருஷ்ணர் குறித்து சுவாமி ஸ்ரீலபிரபுபாதா எழுதிய புத்தகங்கள் குறைந்த நன்கொடையில் வழங்கப்பட்டன.
இரண்டாம் நாள் விழாவான சனிக்கிழமை, கிருஷ்ணர் அவதார ஸ்தலமான மதுரா நகர முறைப்படி விழா நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிமுதல் 12.30 மணி வரையும், மாலை 5 மணிமுதல் இரவு 9.30 மணி வரையும் சிறப்பு, பொது தரிசனம் நடைபெறவுள்ளது.

பாளை. ராஜகோபாலசுவாமி கோயிலில்...
பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், முதல்நாள் (வெள்ளிக்கிழமை) பால்குடம், சுவாமிக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பலர் தங்களின் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கோயிலுக்கு அழைத்துவந்து வழிபட்டனர்.
தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெறும் விழாவில், மாலை 6 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ். கிருஷ்ணன் மற்றும் யாதவர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com