மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு: நெல்லையில் ஆக.27இல் எஸ்டிடியூ தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கமான சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்டிடியூ) சார்பில், மோட்டார்

எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கமான சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்டிடியூ) சார்பில், மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக, அதன் மாநிலத் தலைவர் தஞ்சை பாரூக் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும், காப்பீட்டுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், போக்குவரத்து வாகன வரிகளை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும் வரும் 27ஆம் தேதி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலர் பசீர்லால் தலைமை வகிக்கிறார். இதில், மாநிலப் பொதுச் செயலாளர் அஜீத் ரஹ்மான் சிறப்புரையாற்றுகிறார்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், பல மோட்டார் வாகன தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் நிலவி வருகிறது. பிரிட்டானியா, பார்லே போன்ற அரை நூற்றாண்டை கடந்த நிறுவனங்களும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தள்ளாடி வருகின்றன. எனவே, ஜிஎஸ்டி, மோட்டார் வாகன சட்டம் போன்றவற்றில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்றார்.
இச்சந்திப்பின்போது, எஸ்டிபிஐ திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ. கனி, மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி, எஸ்டிடியூ திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் பசீர் லால், துணைத் தலைவர் கல்வத், பொருளாளர் மைதீன், செயற்குழு உறுப்பினர்கள் நெல்லை முஸ்தபா, திவான், பாளை சிந்தா, பர்கிட் அலாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com