விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்: விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறபோது, விண்வெளிக்கு 3 இந்தியர்களை அனுப்புவதற்காக தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம் என்றார் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் எஸ்.சோமநாத்.


நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறபோது, விண்வெளிக்கு 3 இந்தியர்களை அனுப்புவதற்காக தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம் என்றார் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் எஸ்.சோமநாத்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துறைகள் பட்டமளிப்பு விழாவில் சனிக்கிழமை கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கவரப்பட்ட நான், இங்கு படிக்கும் இளம் மாணவர்களை சந்திப்பதற்காக வந்தேன். 
மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும் வளாகம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது. அந்த வளாகத்துக்கும், இங்குள்ள ஆசிரியர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்த விரும்புகிறேன்.
தற்போது இஸ்ரோவின் 50-ஆவது ஆண்டு. இந்த ஆண்டுதான் விக்ரம் சாராபாயின் நூற்றாண்டும்கூட. விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழா கடந்த 12-ஆம் தேதி ஆமதாபாதில் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 12 வரை விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடவிருக்கிறோம். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறபோது, இந்தியர்கள் 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அந்த இலக்கை நோக்கி நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். அதற்கான ராக்கெட், தொழில்நுட்பம் ஆகியவை தயாராக இருக்கின்றன என்றார்.
முன்னதாக பட்டமளிப்பு விழா உரையாற்றிய சோமநாத் பேசியதாவது: 
இங்கே பட்டம் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மறுசுழற்சி முறையில் ராக்கெட்டை பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. 
அடுத்த கட்டமாக அந்த தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்டே அனைவரும் பணியாற்றவிருக்கிறார்கள். 
சிறிய அளவிலான செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். சந்திரயான் 2 வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com