சகாய அன்னை ஆலய திருவிழா இன்று தொடக்கம்
By DIN | Published On : 30th August 2019 10:21 AM | Last Updated : 30th August 2019 10:21 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனி அருகே ஜவாஹர்நகரில் உள்ள அருள்நிறை சகாய அன்னை தேவாலய திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இத்தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடைபெறும். செப். 6 ஆம் தேதி மாலையில் நற்கருணைப் பெருவிழா, அசனம் ஆகியவை நடைபெறுகிறது. செப். 8 ஆம் தேதி காலை 8 மணிக்கு முதல் நற்கருணைப் பெருவிழா, 14 ஆம் தேதி ரெட்டியார்பட்டி வேளைநகர் தோட்டத்தில் வைத்து தாய்மையின் திருவிழா ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை ம.அருள்அம்புரோசு, உதவிப் பங்குத்தந்தை கு.ஜேக்கப் அமல ப்ரினீத் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...