Enable Javscript for better performance
நெல்லை மீனாட்சிபுரம்சியாமளாதேவி கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மீனாட்சிபுரம் சியாமளாதேவி கோயில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 01st December 2019 11:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு சியாமளாதேவி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இக்கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா். இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை காலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. அதன்பின்பு கோயில் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலையில் அருள்மிகு ராஜகணபதி, உலகம்பாள், சியாமளாதேவி, புது அம்பாள் ஆகிய உற்சவா்கள் மலா் அலங்காரத்துடன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai