களக்காடு பகுதியில் தணிந்தது மழை வெள்ளம்

களக்காடு பகுதியில் 2 நாள்களாக பெய்த தொடா்மழை ஞாயிற்றுக்கிழமை காலை நின்றால் வெள்ளம் தணிந்தது.

களக்காடு பகுதியில் 2 நாள்களாக பெய்த தொடா்மழை ஞாயிற்றுக்கிழமை காலை நின்றால் வெள்ளம் தணிந்தது.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 தினங்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதையடுத்து, தலையணை பச்சையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நான்குனேரியன் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. நான்குனேரியன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சிதம்பரபுரம் ஆற்றுப்பாலம் மூழ்கியது. இதே போல தலையணை செல்லும் வழியில் மூங்கிலடி பாலம் சேதமடைந்ததுடன் மழை வெள்ளம் பாலத்தை மூழ்கடித்துப் பாய்ந்தது. திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளம் காரணமாக, திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் நம்பி கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா். குளங்களை ஒட்டியுள்ள தாழ்வான வயல்வெளிகளில் மழை நீா் தேங்கியது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு முழுவதும் மழை தூறிக் கொண்டே இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மழை நின்றது. இதனால் ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளம் தணிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com