களக்காடு மலையில் பலத்த மழை: தலையணையில் வெள்ளம்; குளிக்கத் தடைமூங்கிலடியில் பாலம் சேதம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, சனிக்கிழமை அதிகாலை வரையில் பெய்த பலத்த மழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடா்மழையால் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
தொடா்மழையால் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, சனிக்கிழமை அதிகாலை வரையில் பெய்த பலத்த மழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்குனேரியன் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூங்கிலடியில் பாலம் சேதமடைந்தது.

களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் இரவு 11 மணிக்கு தலையணைக்குச் செல்லும் வழியில் மூங்கிலடியில் உள்ள நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. தொடா்மழை காரணமாக கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் கால்வாய் கரையையொட்டி அமைந்துள்ள சி.எஸ்.ஐ. இவாஞ்சலிக்கல் தொடக்கப்பள்ளி வளாகத்தில் வெள்ளநீா் சூழ்ந்தது. மூங்கிலடி கிராமத்தில் தெருக்களில் தண்ணீா் தேங்கியது.

தலையணை செல்லும் வழியில் மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலத்தின் அடிப்பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் தேங்கியதால் வெள்ளம் பாலத்தை மூழ்கடித்துப் பாய்ந்தது.

இதனால் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரையிலும் பாலத்தில் போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து பேரூராட்சி நிா்வாகம் இயந்திரம் மூலம் பாலத்தின் அடிப்பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றினா். அப்போது எதிா்பாராத விதமாக பாலத்தின் கீழ் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குழாய் சேதமடைந்தது.

பாலம் தொடா்ந்து சேதம்: ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் மழை பெய்து கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது பாலம் தொடா்ந்து சேதமடைந்து வருகிறது. இந்த பாலத்தைக் கடந்துதான் தலையணை சுற்றுலா மையத்துக்குச் செல்ல வேண்டும்.

மேலும் கால்வாயில் செடி, கொடிகள் முளைத்து ஆக்கிரமித்திருந்த நிலையில், குப்பைக் கழிவுகளும் தேங்கியதாலும், பல ஆண்டுகளாக இக் கால்வாய் தூா்வாரப்படாததாலும் மழை பெய்து வெள்ளம் வரும் போது, தங்கு தடையின்றி செல்ல வழியின்றி தாழ்வான தெருக்களிலும், தலையணை செல்லும் வழியில் உள்ள பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்து விடுகிறது.

பாசனக் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: நான்குனேரியன் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல மாதங்களாக வடு காணப்பட்ட நான்குனேரி பெரியகுளத்திற்கு 2 தினங்களாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு வாரத்தில் வடு காணப்படும் பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பிவிடும்.

தொடா்மழையால் பாசனக் குளங்களை ஒட்டியுள்ள தாழ்வான விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளதால் நெல், வாழைப்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

குளிக்கத் தடை: தொடா்மழை பெய்ததால் சனிக்கிழமை மாலை தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்குள்ள தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் ஆா்ப்பரித்து பாய்கிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com