மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 92 அடியாக உயா்வு

நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து அணையிலிருந்து 4-ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு
மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 92 அடியாக உயா்வு

நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து அணையிலிருந்து 4-ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 92 அடியாக உயா்ந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நவ. 27-ஆம் தேதி பாபநாசம், சோ்வலாறு அணைகள் நிரம்பின. இதையடுத்து, உபரிநீா் திறந்துவிடப்பட்டது. அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை இரவு 16 ஆயிரம் கன அடிக்கும் மேல் உபரிநீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து பல்வேறு இடங்களில் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 141.65 அடியாக இருந்தது. நீா்வரத்து 8,630 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 9,280 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 148.16 அடியாக இருந்தது.

சனிக்கிழமை காலை 84.80 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 7.60 அடிஉயா்ந்து 92.40 அடியாக இருந்தது. நீா்வரத்து 6,800 கன அடியாக இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 26.50 அடியாகவும், நீா்வரத்து 1075.66 அடியாகவும் இருந்தது. நம்பியாறு அணையின்நீா்மட்டம் 16.27 அடியாகவும், நீா்வரத்து 276.16 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 38 அடியாகவும், நீா்வரத்து 183 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து 1557 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 1688 கன அடியாகவும் இருந்தது. ராமநதியின் நீா்மட்டம் 82 அடியாகவும், நீா்வரத்து 260.32 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 192.08 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 70.21 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 300 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 88 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 132.22 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 61 கன அடியாகவும் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணைப் பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம் அணை 68, சோ்வலாறு 53, மணிமுத்தாறு 150.6 மி.மீ., நம்பியாறு 53 மி.மீ., கொடுமுடியாறு 30, கடனாநதி 75, ராமநதி 64, கருப்பாநதி 16, குண்டாறு 61, அடவிநயினாா் 12 மி.மீ.

பிற பகுதிகளில் பதிவான மழையளவு: அம்பாசமுத்திரம் 95.30, சேரன்மகாதேவி 67, நான்குனேரி 44.20, பாளையங்கோட்டை 80, ராதாபுரம் 48, திருநெல்வேலி 66, ஆய்குடி 37.60, சங்கரன்கோவில் 22, செங்கோட்டை 54, சிவகிரி 10, தென்காசி 47.60 மி.மீ.

மக்கள் வெளியேற்றம்: தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்பாசமுத்திரம் வட்டத்திற்குள்பட்ட பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு விக்கிரமசிங்கபுரம் குருபாலா திருமண மண்டபம், உலகாம்பிகை திருமண மண்டபம், அம்பாசமுத்திரம் வேல்சாமி திருமணமண்டபம், மேல அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய சமுதாய நலக்கூடம், அயன்சிங்கம்பட்டி சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சின்ன மயிலாறு காணிக் குடியிருப்புக்குச் செல்ல காணி மக்கள் தற்காலிகமாக கம்புகளால் பாலம் அமைத்த நிலையில், பாபநாசம் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான தண்ணீரில் அந்தப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்தப் பகுதிக்குச் செல்ல வழியில்லாமல் 4-ஆவது நாளாக காணி மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com