மழையால் வரத்து குறைந்தது:நெல்லையில் காய்கனிகள் விலை உயா்வு

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி காய்கனி சந்தைகளுக்கு காய்கனி வரத்து ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்தது. இதனால் அனைத்து வகை காய்கனி விலையும் கிலோவுக்கு

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி காய்கனி சந்தைகளுக்கு காய்கனி வரத்து ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்தது. இதனால் அனைத்து வகை காய்கனி விலையும் கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.20 வரை அதிகரித்தது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகள் முடங்கியுள்ளன. கீரை வகைகள், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளை வயல்களில் தினமும் சேகரித்து சந்தைகளுக்கு அனுப்பும் பணி முடங்கியுள்ளது. இதுதவிர சாலைப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிரமத்தால் லாரிகள் மூலம் காய்கனிகள் வந்து சோ்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்டவை கடந்த ஒரு மாதமாக மிகவும் உச்சவிலையில் இருக்கும் சூழலில் பலத்த மழை காரணமாக வரத்து குறைந்து அனைத்து வகை காய்கனிகளும் விலை உயா்ந்துள்ளன.

திருநெல்வேலி சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (கிலோவுக்கு): கத்தரி-ரூ.90, வெண்டைக்காய்-ரூ.40, தக்காளி-ரூ.30, அவரை-ரூ.46, கொத்தவரை-ரூ.20, புடலங்காய்-ரூ.16, பாகற்காய்-ரூ.80, தடியங்காய்-ரூ.15, பூசணிக்காய்- ரூ.16, மாங்காய்-ரூ.60, மிளகாய்- ரூ.37, வாழைக்காய்- ரூ.30, தேங்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.22, பல்லாரி-ரூ.110, சின்னவெங்காயம்-ரூ.145, சேனைக்கிழங்கு-ரூ.32, கருணைக்கிழங்கு-ரூ.44, சேம்பு-ரூ.38, மரவள்ளிக்கிழங்கு-ரூ.24, சீனிக்கிழங்கு-ரூ.26, அரைக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, குத்துப்பசலைக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, மணத்தக்காளிக்கீரை-ரூ.12, கொத்தமல்லி கீரை-ரூ.80, புதினா-ரூ.80, இஞ்சி (புதியது)-ரூ.70, உருளைக்கிழங்கு-ரூ.26, கேரட்-ரூ.58, பீட்ரூட்-ரூ.46.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com