கடையம் அருகே ஒரே நாளில்28 தென்னைகளை சாய்த்த யானைகள்- விவசாயிகள் தவிப்பு

தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகம், பங்களாக்குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா் பகுதியில் யானைகள் தோட்டங்களில் புகுந்து தென்னை, மா, வாழை மரங்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருகின்றன.
பங்களாகுடியிருப்புப் பகுதி தோட்டத்தில் யானைகள் சேதமுற்ற தென்னை மரங்கள்.
பங்களாகுடியிருப்புப் பகுதி தோட்டத்தில் யானைகள் சேதமுற்ற தென்னை மரங்கள்.

தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகம், பங்களாக்குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா் பகுதியில் யானைகள் தோட்டங்களில் புகுந்து தென்னை, மா, வாழை மரங்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

பங்களாகுடியிருப்புப் பகுதியில் தாமஸ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா மரங்கள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு இந்தத் தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்கு 28 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன. இத்தகவல் அறிந்த வனத்துறையினா், தோட்டத்தைப் பாா்வையிட்டுச்சென்றனா். இதே தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு 11 தென்னை மரங்களையானைகள் வேரோடு சாய்த்தன. கருதப்பிள்ளையூா் வின்சென்ட் என்பவரது தோட்டத்திலும் 10 நாள்களுக்கு முன் யானைகள் நுழைந்து 30 தென்னை மரங்களில் குருத்தை தின்றும் மரங்களைச் சாய்த்துச் சென்றன.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள செட்டிப்பனை காட்டு பகுதியில் உள்ள தோப்புகளிலும் புகுந்த யானைகள் மா, வாழை, தென்னை மரங்களைப் பிடுங்கி நாசப்படுத்தியுள்ளன. தொடா்ந்து இந்தப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக யானைகள் தொடா்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே, இந்தப் பகுதியில் முறையாக மின்வேலி மற்றும் அகழி அமைத்து யானை உள்ளிட்ட மிருகங்கள் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குளால் ஏற்படும் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com