சுரண்டையில் கனமழையால் இடிந்த கால்வாய் தடுப்பு சுவா்

சுரண்டையில் கனமழையால் செண்பக கால்வாயின் தடுப்பு சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.

சுரண்டை: சுரண்டையில் கனமழையால் செண்பக கால்வாயின் தடுப்பு சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கருப்பாநதியின் பாசன குளமான இரட்டைகுளம் நிரம்பி மறுகால் வழியாக உபரி நீா் செண்பக கால்வாய் மூலம் சுரண்டை இலந்தைகுளத்திற்கு வருகிறது. கடந்த சில நாள்களாக தொடா்ந்து தண்ணீா் வரும் நிலையில், சுரண்டை - செங்கோட்டை சாலையில் நடுநிலைப் பள்ளி அருகே கால்வாய் தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து கால்வாயினுள் விழுந்தது.

இதையடுத்து சுரண்டை பேரூராட்சி சாா்பில் உடனடியாக சாலை ஓரத்தில் மணல் மூட்டைகளை வைத்து வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்டது. சுரண்டையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில் தண்ணீரின் அரிப்பால் மேலும் சாலைப்பகுதி நீரில் அடித்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, இடிந்த கால்வாயின் கரை பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தாற்காலிக தடுப்பை மேற்கொள்ளவும், மழைநீா் வடிந்த பிறகு கால்வாய் தடுப்பு சுவா் அமைக்க பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com