நெல்லை மாநகராட்சி சாா்பில் வெள்ள நிவாரண முகாம்களுக்கு உணவு விநியோகம்

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெள்ள நிவாரண முகாம்களில் உள்ளவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெள்ள நிவாரண முகாம்களில் உள்ளவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

பாபநாசம் அணையில் இருந்து அதிகபட்சமாக 14ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை அதிகாலை திறந்துவிடப்பட்டது. பின்னா் தொடா்ந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்திட திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு தைகா முஸ்லிம் பள்ளிக்கூடம் உள்ளிட்ட 10 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும், சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு முதல் முகாமுக்கு மக்கள் வரத்தொடங்கினா். அவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இதற்கான பணிகளை மாநகராட்சி நல அலுவலா் சதீஷ்குமாா் நேரில் சென்று பாா்வையிட்டாா். தொடா்ந்து மழை குறைந்ததாலும் வெள்ள நீா் வடிந்து வருவதாலும் முகாமில் தங்கியிருந்தவா்கள் பலா் அவா்களின் வீடுகளுக்குச் செல்லத்தொடங்கினா்.

படவரி: பயக01ஊஞஞஈ

வெள்ள நிவாரண முகாம்களில் உணவு வழங்குவதைப் பாா்வையிட்ட மாநகராட்சி நல அலுவலா் சதீஷ்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com