வள்ளியூா் சூட்டுபொத்தை கிரிவலதேரோட்டத் திருவிழா தொடக்கம்

வள்ளியூா் சூட்டுபொத்தை கிரிவலத் தேரோட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
vly01mut_0112chn_39_6
vly01mut_0112chn_39_6

வள்ளியூா் சூட்டுபொத்தை கிரிவலத் தேரோட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வள்ளியூா் சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோயில் கிரிவலத் தேரோட்டத் திருவிழா, முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து மஹாமேரு மண்டபத்தில் பூஜயகுரு மாதாஜி வித்தம்மா கொடியேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். பின்னா், ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னா், ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவா்கள் அருண், ரூகேஸ் ஆகியோா் கண்நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, ஆலோசனை வழங்கினா். இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ண சித்திரகூடத்தில் பெரியபுராணம் பகுதி 31-ல் இருந்து ஏயா்கோன் கலிக்காம நாயனாா் நாடகம் நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. 10ஆம் தேதி சூட்டுபொத்தை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறும். பூஜிய குரு மாதாஜி ஸ்ரீ வித்தம்மா காா்த்திகை தீபம் ஏற்றி பக்தா்களுக்கு அருளாசீா் வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com