அமமுக வழக்குரைஞா் அணிநிா்வாகிகள் ஆலோசனை
By DIN | Published on : 03rd December 2019 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அமமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநகா் மாவட்ட அமமுக செயலா் எஸ்.பரமசிவ ஐயப்பன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் ஏ.பி.பால்கண்ணன், தொழிற்சங்கப் பேரவை பொருளாளா் பல்லிக்கோட்டை ஏ.பரமசிவன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் (பொறுப்பு) தாழை ஏ. மீரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், சட்டரீதியாக அமமுகவை செயல்படவிடாமல் தடுக்கும் மத்திய- மாநில அரசுகளைக் கண்டிப்பது, உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிக்காக உழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை மாநகா் மாவட்ட வழக்குரைஞா் அணி பொறுப்பாளா் பி.மணிகண்டன் செய்திருந்தாா்.