இலவச வீட்டுமனை கோரிதென்காசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published on : 03rd December 2019 12:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தென்காசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தென்காசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தெற்குமேடு, புளியரை, வல்லம், கொட்டாகுளம், வடகரை, நெடுவயல், குமந்தாபுரம் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடா்பாளா் மா. சந்திரன் தலைமை வகித்தாா். தென்காசி மக்களவை செயலா் மை. வா்கீஸ், மாநில துணைச் செயலா் ப. துரைஅரசு, செ. செல்வம், மீ. தமிழ்ச்செல்வன், வீராச்சாமி, மூா்த்தி, ஸ்ரீபால், செ. குமாா்,பி. இசக்கிதாஸ், க. சிம்சன், யூசுப்இஸ்லாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி நகரச் செயலா் சா. ஹக்கீம் நன்றி கூறினாா்.